புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவர் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் 38 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் அனிமேஷனில் நடிக்கும் படம் உருவாகவுள்ளது.
எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் அடுத்த பாகமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை அவர் முதலமைச்சர் ஆகிவிட்டதால் எடுக்க முடியாமல் போனது.
இந்த நிலையில் எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த நகைச்சுவை நடிகர் ஐசரிவேலன் அவர்களின் மகன் ஐசரி கணேஷ் தனது தந்தை மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவாக இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் மறைந்த நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் அனிமேஷனில் நடிக்கவுள்ளனர்.