ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு விசாரணை நிறைவு!!
கடந்த வாரத்தில் நம் தமிழகத்தில் மீண்டும் ஆறுமுகசாமியின் ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. இந்த ஆறுமுகசாமி ஆணையம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க அமைக்கப் பட்டது.
அதன் முதல் கட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையம் ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து 2 நாட்களாக ஆஜராகி பல்வேறு விதமான தகவல்களை கூறினார்.
அதில் சசிகலா ஜெயலலிதாவுக்கு விரோதமாக எந்த ஒரு சதித் திட்டம் தீட்ட வில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்றைய தினம் சசிகலா தரப்பு விசாரணை நடைபெற்றது. தற்போது அந்த விசாரணை நிறைவு அடைந்துள்ளது. அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு விசாரணையும் நிறைவுபெற்றது.
குறுக்கு விசாரணை தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் அளித்தார். அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டதாக ஆணையம் தெரிவித்த நிலையில் சசிகலா தரப்பு அறிவித்துள்ளது.
