Connect with us

ஜெயலலிதா மரணம்: 90% விசாரணை முடிந்தும் மீண்டும் ஆணையம் ஆலோசனை!

ஜெயலலிதா

தமிழகம்

ஜெயலலிதா மரணம்: 90% விசாரணை முடிந்தும் மீண்டும் ஆணையம் ஆலோசனை!

ஜெயலலிதா மரணம்: 90% விசாரணை முடிந்தும் மீண்டும் ஆணையம் ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றது. தொடர்ந்து 2 முறை அதிமுக வெற்றி பெறுவதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தான் காரணம். ஜெயலலிதா என்று அழைக்கப்படுவதைவிட தமிழக மக்களிடையே அம்மா என்று அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் ஆட்சியில் இருக்கும்போதே உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் பற்றிய சர்ச்சை இன்றளவும் நிலவி கொண்டுதான் வருகிறது.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய போது ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே கடும் விவாதம் நிகழ்ந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் அடுத்தகட்ட விசாரணை குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. ஜெயலலிதா மரணத்தில் 90% விசாரணை முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக யார் யாருக்கு சம்மன் அனுப்புவது என ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சென்னை எழிலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அப்போலோ மருத்துவமனை தரப்பு, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். விசாரணை ஆணையத்திற்கு உதவ 8 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், IAS,IPS அதிகாரிகள், போயஸ்கார்டன் பணியாளர்கள் என இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top