ஜெயக்குமார் அளித்த புகார்: டிஜிபி-க்கு வந்த கெடுபுடி !!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு தமிழக அரசு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மார்ச் 12-ஆம் தேதி விடுதலை ஆனார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் ஜெயகுமார் குடியரசு தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர்கு கடிதம் எழுதினார்.

அதில் தன்னை கைது செய்யும் போது காவல்துறை துணை கமிஷனர் சுந்திரபதனம் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் அதிகார துஷ்பிரியோக பலத்தில் ஈடுப்பட்டதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே ஜெயகுமார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் படி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழக அரசு உள்துறை செயலாளர் உதயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment