அடுத்தடுத்து அதிமுகவை அட்டாக் பண்ணும் ஆபத்து! வேதா இல்லம் பற்றி ஜெயக்குமார்!!

சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிர்ச்சிகரமான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று கூறியுள்ளது.அதோடு அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் ரத்து செய்தது.

ஜெயக்குமார்

இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினருக்கு கோயிலாக இருந்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கட்சியில் சில கருத்து பரிமாற்றம் இருக்கும் அதை பெரிது படுத்திப் பேச வேண்டாம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் வரமாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.வியாபாரிகள் தான் இந்த குளத்தில் தண்ணீர் இருந்தது என்பதை பார்த்துக் கொள்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.இதனால் அதிமுக கட்சியில் மீண்டும் ஒரு குழப்பம் உருவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment