
பொழுதுபோக்கு
நடிகையின் கலெக்டர் கனவுக்கு கை கொடுத்த ஜெய்!! யாருன்னு தெரியுமா?
பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இந்த படத்தினை தொடர்ந்து சுப்ரமணியபுரம், சரோஜா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த ஜெய் தற்போது பட்டாம்பூச்சி என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக புது அவதாரம் எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பட்டாம்பூச்சி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கலெக்டர் ஆக ஆசைப்பட்ட நடிகைக்கு நடிகர் ஜெய் கை கொடுத்து உதவியுள்ளார். களவாணி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்த மனிஷா பிரியதர்ஷினி சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார்.
அதோடு படிப்பிலும் சிறந்து விளங்குகிறார். தற்போது சட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வரும் இவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மனிஷா பிரியதர்ஷினியை கலெக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்பது அவரது தாயாரின் கனவு ஆகும்.
எனவே யுபிஎஸ் தேர்வுக்கு தயாராக புத்தகங்களை வாங்கி கொடுக்குமாறு நடிகர் ஜெய்க்கு அவரது தாயார் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனை ஏற்று அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து மனிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளாராம்.
