
Entertainment
ஷாருக்கான் – நயன்தாரா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன் பின் பல வெற்றி படங்களை கொடுக்க தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.
அட்லீ இயக்கத்தில் தற்போது ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக்கி வருகிறார். அப்படத்தில் அவருடன் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நயன்தாராவுக்கு ஏற்கனவே ஷாருக்கானுடன் நடக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரது நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு குத்து பாட்டிற்கு நடனமாட நடிகை நயன்தாராவை இயக்குனர் அணுகியுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் அவரால் அதில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் இந்த படத்தில் அட்லீ முயற்சியில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதலில் இணையுள்ளனர்.இந்த படத்தில் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படத்திற்கு முதலில் லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து அட்லி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு சென்சார் நல்ல படியாகவே வந்துள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
