அக்டோபர்ர மாத இறுதி முதல் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரி ,ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன.
இதன் மத்தியில் வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கி தொடர் மழையை கொடுத்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை வங்கக்கடலில் 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
இவை கடந்த 20 நாட்களிலேயே உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்றைய தினம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அதற்கு ஜாவத் புயல் என்று பெயரிடப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த ஜாவத் புயல் வலுவிழந்து கொண்டே வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக ஜாவத் புயல் வலுவிழந்து வருகிறது வானிலை ஆய்வு மையம். இன்று மாலை 6 மணிக்கு இவை மேற்கு வங்க கடற்கரையை நெருங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.