Connect with us

ஆத்தாடி!! ஒரு கிலோ மல்லிகை பூ 1,200 ரூபாயா?… முல்லை விலையும் மூச்சு வாங்க வைக்குதே!

மல்லிகை பூ

செய்திகள்

ஆத்தாடி!! ஒரு கிலோ மல்லிகை பூ 1,200 ரூபாயா?… முல்லை விலையும் மூச்சு வாங்க வைக்குதே!

ஆடிப்பெருக்கையொட்டி மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 1200ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாளை ஆடி பெருக்கை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரிப்பு மற்றும் தொடர் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ 1200ரூபாய்க்கு விற்பனையாகி வருவது பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் மதுரை மல்லிகை பூ கிலோ 1200 ரூபாய்க்கும்,
சமங்கி கிலோ 120 ரூ பாய்க்கும், பிச்சி பூ 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முல்லை கிலோ 500 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் கிலோ 100 ரூபாய்க்கும், செண்டு மல்லி கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மழைக்காலம் என்பதால் மதுரை மல்லிகை பூவின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இன்று மதுரை மல்லிகை 1200க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top