200 தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்: மாநகராட்சி அதிரடி !!

சொத்து வரி கட்டாத 200க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் விடப்பட்டுள்ளதாக மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பள்ளிகளுக்கு சொத்து வரி, வாகனங்களுக்கு வாகன வரி போன்ற பல்வேறு வரிகள் தமிழக அரசு வித்திக்கப்படுகின்றன. ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகதான் வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொரோனா காலக்கட்டத்தில் தங்களுக்கு சொத்து வரி, வாகன வரி போன்ற வரிகளை நீக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதனை முன்வைத்து தமிழ அரசுக்கு கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களையும் நடத்தி வந்தன. இதனிடையே தமிழகம் முழுவதும் ஏராளமாக சொத்துவரி போன்ற வரிகளை நிலுவைகளில் வைத்துள்ளனர்.

இந்த சூழலில் சமீபத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது தமிழகத்தில் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பி உடனடியாக சொத்து வரி செலுத்த வேண்டும் என்றும் மீறினால் பள்ளிகளில் உள்ள பொருட்களை எடுத்து செல்வோம் என்று நோட்டிஸ்சில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 6 லட்சத்திற்கும் மேல் கட்டணம் போடப்பட்டுள்ளதால் இதனை கண்டித்து வரக்கூடிய 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment