சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்கு விக்கும் வகையில் 1 லட்சம் வரையிலான பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும் என மெட்ரோ அறிவித்துள்ளது.
அதன் படி ஒரு மாதத்தில் அதிகப்பட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளிக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உள்ள பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும் என்றும் இது தவிர மேலும் 30 நாட்களுக்கு விருப்பம் போல் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் தோறும் பரிவர்த்தனைக்கு ரூ. 1500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளை தேர்ந்து எடுத்து மாதாந்திர அதிஷ்ட குலுக்கல் நடத்தப்பட்டு தலா ரூ. 2,000 மதிப்புள்ள கூப்பன் அல்லது பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பயண அட்டை வாங்கிய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து, மாதாந்திர குலுக்கல் நடத்தப்படும் என்றும் இதில் ரூ.500- க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ. 1,450 இலவச டாப் அப் மற்றும் ரூ. 2000 -க்கு கூப்பன் அல்லது பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் வரும் 21.தேதி முதல் அமலுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்து இருக்கிறது.