தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று பதிவிட்ட முதல்வர் – உங்கள் ஆசைக்கு பகுத்தறிவு புத்தாண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள் ! கஸ்தூரியின் அதிரடி!

நாளை மறுதினம் தை முதல் நாள் பிறக்கிறது. அதாவது தை 1ம் தேதியை தமிழர்கள் தை பொங்கல் தினமாக மட்டுமே இன்று வரை கொண்டாடி வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது.

சித்திரை 1ம் தேதி கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு என்று பஞ்சாங்கம் வாசிக்கும் முறை நடைமுறையில் இருந்து வந்தது அது எல்லாம் மாற்றப்பட்டது.

பின்பு மீண்டும் அதிமுக ஆட்சியில் வழக்கம்போல் எப்போதும் போல் சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.

இப்போது அமைந்துள்ள திமுக அரசு மீண்டும் தை 1ம் தேதியை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கவில்லை என்றாலும் முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள நடிகை கஸ்தூரி கீழ்க்கண்டவாறு தனது பதிலை கூறியுள்ளார்.

சுதந்திர தினம், குடியரசு தினம் வரிசையில் தமிழ்ப் புத்தாண்டு தேதியையும் மாற்றிய ஸ்டாலின் அவர்கள்
கண்டிப்பாக பொங்கலை விட்டுக்குடுக்க இயலாது. சித்திரை வருடபிறப்பையும் விட முடியாது.
அவர்கள் ஆசைக்கு திராவிட பகுத்தறிவுப் உடன்பிறப்பு ஆண்டு என்று பெயரிட்டு விட்டால் சர்ச்சையே இல்லை!

என அவர் கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment