ஜனவரி 31 வரை கர்ப்பிணிகள் வெளியே வேலைக்கு செல்ல வேண்டாம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு!

கொரொனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எப்போதும் கொரோனா பரவல்  மஹாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் தான் அதிகம் இருக்கும் தற்போது ஒரு நாள் பாதிப்பு 40000 என்ற வகையில் வந்து கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போல மற்ற மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் ஜன.31 வரை கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவிகித பேர் மட்டுமே பணிக்கு வர அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment