ஜனவரி1-ம் தேதி முதல்! விலையை உயர்த்த Ducati முடிவு..!!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலைவாசிகளும் உயர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த Ducati நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியை மையமாக கொண்டு செயல்படும் Ducati நிறுவனம் இந்தியா முழுவதும் பெங்களூர், சென்னை, கொச்சி, ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

அதே சமயம் கடந்த சில நாட்களாகவே உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக பெரும் நஷ்டத்தில் திண்டாடுவதாக தெரிகிறது. இவற்றை கருத்தில் கொண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஏற்கனவே எக்ஸ்-ஷோரூம் உள்ள இருசக்கர வாகனங்களின் விலையும் உயரும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும், Ducati நிறுவனத்தின் இத்தகைய முடிவால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.