Connect with us

ஜனனி வெளியேற்றத்தால் கமல் அதிருப்தியா?

பொழுதுபோக்கு

ஜனனி வெளியேற்றத்தால் கமல் அதிருப்தியா?

195f55f08e47ed371b9beb44829286ac-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஐஸ்வர்யா, விஜயலட்சுமியை விட நல்ல போட்டியாளரான ஜனனியை பிக்பாஸ் வெளியேற்றியது மும்தாஜ் உள்பட ஒருசிலரை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. கமல்ஹாசனும் தனது அதிருப்தியை மறைமுகமாக தெரிவித்தார்.

நான் நேஷனல் ஜியாகராபி சேனல் நபர் போல் இந்த நிகழ்ச்சியை என்னால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும், ஜனனி வெளியேற்றப்பட்டதால் மும்தாஜ் உள்ளிட்ட சிலர் கண்ணீர் விட்டனர்.. பலர் கோபப்படுகின்றனர்.. அதை நான் வழிமொழிகிறேன். ரசிகர்கள் மனதில் ஒரு நியாயம் இருக்கும், உள்ளே பிக்பாஸ் மனதில் ஒரு நியாயம் இருக்கும்.. இது வியாபாரம் என்று கூறினார். இதிலிருந்து ஜனனியின் வெளியேற்றம் கமலுக்கு அதிருப்தியை தந்ததாகவே கருதப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நான்காவது வாரமே வெளியேற்றப்பட வேண்டிய ஐஸ்வர்யாவை இறுதி வரை கொண்டு சென்றது மட்டுமின்றி அவரை இரண்டாவது இடத்திற்கும் தேர்ந்தெடுத்த பிக்பாஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top