ஆரி சூப்பர்… ரியோவிற்கு ஆப்பு வைத்த விஜய் டிவி பிரபலம்!

4e4640efe159ce4d1f9fbd352120f406

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், நிஷா, அனிதா, சனம், வேல்முருகன், சுரேஷ் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அனிதா மற்றும் ஆரியிடம் பேசிய சனம், “நான் பல முறை உங்களை காயப்படுத்தி இருப்பேன். அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுங்கள்” என்று கூறி ஆரிக்கு முத்தமிட்டார். அதன் என்று பேசிய ஆரி, “மறப்போம் மன்னிப்போம்” என்று கூறினார். இதை பார்த்த விஜய் டிவி பிரபலமும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “பிக்பாஸ் நேற்று இறுதியில் எல்லாருக்கும் நன்றி சொல்லி ஆரியின் கன்னத்தில் சனம் கொடுத்த முத்தத்தில் இருந்த பிரியம் நேர்த்தி.

அதற்கு பின்பு”ரியோவின் பேச்சும், சிரிப்பும், ஆட்டமும், பாட்டமும் எவ்வளவு நிஜமற்றது என்று கடந்த 2 நாட்களாக நிரூபணமானது.

1. மூன்று நாட்களுக்கு முன், சற்று ஒதுங்கி அமைதியாயிருந்த ஆரியிடம் வலியச் சென்று “இன்னும் மூன்று நாள்தான் ப்ரோ, சகஜமா ஜாலியா இருங்க, எல்லாரோடயும் சேருங்க ப்ரோ” என்று தோரணையுடன் அட்வைஸ் பண்ணிவிட்டு அத்தோடு பதுங்கியவர்தான், இன்னும் அவரைக் காணாமல் எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று நிஷா அவரை “ஏண்டா இப்புடி இருக்க? உன் மூஞ்சியப் பாக்க சகிக்கல” என்று பார்வையாளர்கள் எல்லார் சார்பிலும் கேட்டது நமக்கு ஆறுதலாயிருந்தது.

2. கேபியை ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் அணைத்து, அரவணைத்து தன் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவர், அவர் 5 லட்ச பெட்டியை எடுத்துவிட்டார் என்றவுடன் அதைத் தனக்குத் தந்துவிடும்படி கெஞ்சிக் கூத்தாடி,  emotional blackmail செய்து, போராடியும் பார்த்துத் தோற்று அடங்கிப்போனார். அந்த அன்பும், உறவும் எங்கே போனது?

ஞாயிறு நிகழ்ச்சியில் ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கைப் பார்த்து கைதட்டப் போகிற நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் நினைத்து நினைத்து நொந்துபோவதைப் பார்க்கமுடிகிறது. அதனால் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார். அதுவும் மணல்கோட்டையானது!

அதனால்தான் நிஷாவிடம் சொன்னார், “evict ஆகிப் போயிருந்தால் கூட சிரித்துக்கொண்டே போயிருப்பேன்” என்று.The audience had predicted this long ago!” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.