Connect with us

விடாமல் தொடர்ந்து நடைபெறும் ‘ஜல்லிக்கட்டு’…!! அரியலூர், தர்மபுரியில் கோலாகலமாக தொடக்கம்;

Jallikattu 1 16420787644x3 1

Tamil Nadu

விடாமல் தொடர்ந்து நடைபெறும் ‘ஜல்லிக்கட்டு’…!! அரியலூர், தர்மபுரியில் கோலாகலமாக தொடக்கம்;

விடாமல் தொடர்ந்து நடைபெறும் ‘ஜல்லிக்கட்டு’…!! அரியலூர், தர்மபுரியில் கோலாகலமாக தொடக்கம்;

தமிழர்கள் என்றாலே உலகிலுள்ள அனைவருக்கும் தொன்றுதொட்ட வாழ்ந்த மக்கள் என்றும் வீரம் செறிந்த மண்ணில் பிறந்தவர்கள் என்றும் கருதுவர். அந்தப்படி அவர்கள் செயலிலும் மட்டுமின்றி விளையாட்டிலும் வீரத்தையை மையமாகக் கொண்டே செயல்படுவர்.

அவர்களின் வீர விளையாட்டாக காணப்பட்டது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, கோழிசண்டை உள்ளிட்ட போட்டிகள் தான். இவை பொங்கல் தொடங்கினால் தமிழகமெங்கும் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும்.

இந்தப் போட்டி தற்போது வரையும் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அரியலூர், தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் மாசி மகத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி சீரும் சிறப்புமாக தொடங்கியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் கொண்டுவரப்பட்டுள்ளன மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று உள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் டிஎன்சி மைதானத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியிலும் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top