பேச்சில் மட்டுமல்ல செயலிலும் தமிழர்கள் வீரர்களாக காணப்பட்டனர் அவர்கள் பொழுது போக்காக கூட வீர விளையாட்டையே விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று நடைபெறும்.
ஆனால் இந்தாண்டு காணும் பொங்கல் அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டு அடுத்தடுத்து வரிசையாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினமும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் மற்றொரு இடத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி ஜல்லிக்கட்டு போட்டி ஆகும்.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வரும் திங்கட்கிழமை அன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. கொரோனா அதிகரித்து வருவதால் சில்லக்குடியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து என அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி ரத்தான நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.