காளை முட்டி இளைஞர் மரணம்; எருதுவிடும் விழாவில் அசம்பாவிதம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி இளைஞர் பலியான சம்பாவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கல் நாசம் பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 2. 45 மணி அளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட எருதுவிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திடீரென இரண்டு மாட்டை மந்தையில் விட்டுள்ளனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சின்ன கண்ணியம் பட்டு கிராமத்தை சேர்ந்த முஷ்ரப் என்பவர் மீது மோதியுள்ளது. அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மந்தையில் இருந்த போலீசார் உள்ளிட்டவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காலையில் விரட்டும் பணியில் இருக்கும் போது போலீசார் லத்தியால் தாக்கி தான் முஷரப் இறந்தார் என அவரது உறவினர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் டிஎஸ்பிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.