ஜல்லிக்கட்டு தடை வழக்கு; விசாரணை நவ.29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா மற்றும் விலங்கு நல வாரியம் சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கானது நீதிபதி ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகம், மகாராஷ்டிரா சார்பில் கொண்டுவந்துள்ள சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கல்லக்கட்டை தமிழகம் என கருதமுடியுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? போன்றவைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பீட்டா அமைப்பு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?- உ.பி நீதிமன்றத்தில் பரபரப்பு!!

அதே போல் விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்படக் கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா தனது வாதங்களை முன்வைத்தார்.

தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும் கூறினார். அப்போது பேசிய நீதிபதி மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என்றும் பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வகையில் சேர்ப்பது? என்ற கேள்வியை முன்வைத்தார்.

மலேசியாவின் புதிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தேர்வு

பின்னர் வழக்கின் விசாரணையை வருகின்ற நவ.29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.