மறந்துடாதீங்க! ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு … நாளை கடைசி நாள்!!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியதையடுத்து காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இ-சேவை மையங்களில் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு முன்பதிவு இணையத்தளத்தில் தொடங்கி உள்ளது. இந்நிலையில் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தனித்தனி முன்பதிவு அமைக்கப்பட்டு உள்ளன.

மீண்டும் சோகம்! ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி!

இதில் காளைகளுக்கான பிரிவில் மாட்டு உரிமையாளரின் பெயர், ஆதார் எண், காளையின் மருத்துவ சான்றிதழ் உள்ளிட்டவைகள் பதிவு செய்கின்றனர். அதே போல் வீரர்களுக்கான பிரிவில் மருத்துவ சான்றிதழ், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அவசர தொடர்பு செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்வது அவசியம் ஆகும்.

நாளை 5 மணி வரையில் முன்பதிவு செய்யலாம் என்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு மட்டுமே டோக்கன்கள் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு போதைப்பொருள் சந்தைகளம்’- இபிஎஸ் குற்றச்சாட்டு!!

மேலும், வீரர்கள் madurai.nic.in என்ற அதிகார்வப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.