பொங்கலை ஒட்டி தமிழ்நாட்டில் விளையாட்டு போட்டிகள் அதிகம் நடக்கும் அதில் முக்கியமானது மதுரை பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியாகும்.
பொங்கல் முடிந்து மாட்டுப்பொங்கலில் இருந்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விசேஷமானதாகும்.
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமாக நடைபெறும்.
அதுபோல் பல ஊர்களில் சின்ன சின்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் கொரோனா பரவி வருவதால் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன விதமான பாதுகாப்பு நெறிமுறைகள் என்பதை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.