விளையாட்டு பட்டியலில் இணையும் ஜல்லிக்கட்டு : உதயநிதி

கலாசார விளையாட்டுப் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டை விளையாட்டுப் பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி , சிறப்புத் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறேன். திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், விரிவான ஆய்வு மூலம் விரைவில் சரி செய்யப்படும் என கூறினார்.

அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களது முக்கிய செயல்திட்டம் என தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், அனைத்துத் திட்டங்களையும் காலதாமதமின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

“புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எங்களுக்கு சில ஆலோசனைகள் கிடைத்துள்ளன, அவை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்,” என்று அவர் கூறினார். இதற்கிடையில், கலாச்சார நிகழ்வு பட்டியலில் ஜல்லிக்கட்டு பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டை விளையாட்டு பட்டியலில் சேர்க்க நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்யப்படும் என்றும் உதயநிதி கூறினார்.

தமிழகத்தில் மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அதிரடி தகவல்!

முன்னதாக, 3,391 பயனாளிகளுக்கு ரூ.25.67 கோடி மதிப்பிலான சலுகைகளை அமைச்சர் வழங்கினார். அமைச்சர்கள் எஸ்.ரெகுபதி, சிவா.வி.மெய்யநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.