தமிழகத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஜல்லிக்கட்டு போட்டியில் காளையுடம் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர்கள் இருவரும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களே கவனம்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது..!!
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய மைதானத்தில் பார்வையாளர்களாக அதிகப்பட்சம் 300 மற்றும் மொத்த இருக்கையில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காளையர்கள் 2 டோஸ் தடுப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக போட்டி நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது – ஐகோர்ட் அதிரடி!
அதே போல் காளைகளுக்கு எவ்வித துன்புறுத்தலும் நடைபெறாமல் இருக்க வேண்டும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பது அவசியம். மேலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு விதமான வழிக்காட்டு அம்சங்கள் இடம்பெற்றுள்ளனர்.