ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்தும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது எப்படி? என்பது குறித்து தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கங்களை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காளையின் திமிலை பிடிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுப்பட்டுள்ளது என்றும் ஜல்லிக்கட்டு போட்டில் 15 கி.மீ மட்டுமே காளைகளுக்கு அனுமதியா? வீரர்களுக்கு இடம் போதுமானதா? 30 வினாடிகளில் ஒரு காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டுமா? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

13 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் தந்தை கைது!!

அதே போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதா? கண்காணிப்பு குழுக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை எவ்வாறு கண்காணிக்கிறது? போன்ற கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வைத்தனர்.

இதனிடையே தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகுதி பெறும் ஒரு வீரர் மட்டுமே காளையை தொட முடியும் என்றும் ஒவ்வொரு காளைகளின் தகுதிக்கு ஏற்ப வீரர்கள் போட்டிக்கு அனுப்ப படுவதாகவும் தேவைப்படும் பட்சத்தில் கேள்விகளுக்கான விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன நீதிமன்ற நீதிபதிகளை அழைக்க மாட்டீர்களா? என்ற கேள்வியை முன் வைத்தார்.

அதிர்ச்சி! கர்ப்பிணி ஆசிரியர் மீது தாக்குதல்.. 22 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

இதனைக் கேட்ட வழக்கறிஞர் உங்களை அழைப்பதில் தமிழக அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். தற்போது நிலவி வரும் சூழலில் நீதிபதியின் இத்தகைய பேச்சானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.