ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் புதிய கருத்து!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவசர சட்டத்தின் கீழ் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா: பெங்களூரில் பரபரப்பு!!

அதன் படி, இந்த அவசர சட்டம் என்பது சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்ற ஒரு வாதத்தை முன்வைத்தார்.

அப்போது பேசிய நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விசாரணையை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம் என்ற ஒரு கருத்தை தெரிவித்தார்.

581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?- உ.பி நீதிமன்றத்தில் பரபரப்பு!!

மேலும், இன்றைய விசாரணையில் மனுதாரர் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.