ஜல்லிக்கட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் உறுதி

பழங்காலத்தில் இருந்தே “ஜல்லிக்கட்டு”, “எறுதழுவுதல்” என்றும் அழைக்கப்படுகிறது, இது தமிழர் பண்டிகையான பொங்கல் அறுவடை திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் வருகின்றது. காளைகளை அடக்குவது ஒரு விளையாட்டாகும்.

தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது

நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒருமனதாக இன்று தீர்ப்பளித்தது, மேலும் அதை தொடர்ந்து மாட்டு வண்டி பந்தயங்களை அனுமதிக்கும் மகாராஷ்டிரா சட்டத்தின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை அனுமதிக்கும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கியது.

கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் – பால்வளத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மேலும் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரெகுபதி, ஜல்லிக்கட்டினை உறுதி செய்யும் தீர்ப்பு “வரலாற்று சிறப்புமிக்கது” என்றும், “எங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.