ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரைசதம்.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன் சாதனை..!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 13 பந்துகளில் அரைசதம் எடுத்து ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் 14 பந்துகளில் கேஎல் ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததுதான் சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் அடித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதல் ஓவரை எதிர் கொண்ட ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் அடித்து முதல் ஓவரிலேயே 26 ரன்கள் எடுத்து சரியான தொடக்கத்தை கொடுத்தார். அதனை அடுத்து தொடர்ந்து சிக்சர்கள் அடித்து 13 பந்துகளில் அரை சதம் அடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் லக்சம்பர்க்கிற்கு எதிராக ஆஸ்திரியாவின் மிர்சா அஹ்சன் 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.