ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த முக்கிய நபர்! ரஜினியுடன் வெளியான புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தயாரிப்பாளர்கள் ஜெயிலரின் அறிவிப்பு தீம் இசையை யூடியூப் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். படத்தில் சரவணன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இருப்பதாக கூறப்படுகிறது.

 

rajini jail

பின்னர் வரவிருக்கும் அட்டவணையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தமன்னா மற்றும் ஜெய் ஆகியோர் ஒரு முக்கியமான பிளாஷ் பேக் பகுதிக்காக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ‘கேஜிஎஃப் 2’ புகழ் நடிகர் ஹரிஷ் ராய் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு ஆதித்யாராம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ரஜினிக்கு பதிலாக களமிறங்கி லாபம் பார்த்த லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்தின் கலக்கல் அப்டேட்!

சமீபத்தில் இந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் ஆதித்யாராம், ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment