Connect with us

வதந்தி பரப்புனா இனி ஜெயில் தானாம்.. சவுதி அரசு போட்ட தடாலடி உத்தரவு!

Untitled 74

செய்திகள்

வதந்தி பரப்புனா இனி ஜெயில் தானாம்.. சவுதி அரசு போட்ட தடாலடி உத்தரவு!

வதந்தி பரப்புனா இனி ஜெயில் தானாம்.. சவுதி அரசு போட்ட தடாலடி உத்தரவு!

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் நாட்டில் மிகப் பெரும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது.

அந்த வகையில் ஜனவரி 14 ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற்ற விஷயம் ஒன்று தவறான வதந்திகளால் பெரிய அளவிலான தாக்கத்தினை சமூகத்தில் ஏற்படுத்தியது.

அதாவது பொங்கல் பண்டிகை நாளில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் கே-பாப் இசைக்குழுவின் கச்சேரி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் பெரும் காற்று வீசியதால் இசை நிகழ்ச்சி திடீரென ரத்தாகிப் போனது. இதனால் ரசிகர்கல் புயலில் மாட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிகழ்வின்போது சமூக ஊடகங்களில் சிறுமிகள் காணாமல் போனதாகவும் மேலும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் உலகை உலுக்கின. இந்தநிலையில் அப்படி சம்பவம் எதுவும் நிகழவில்லை என்றும் சமூக ஊடகங்களில் எடுத்து தவறான புகைப்படங்களை வெளியிட்டு வதந்தி பரப்பியது தெரிய வந்துள்ளது.

சவுதி அரேபிய அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றும்புள்ளி வைக்கவும் சமூக ஊடகங்களில் தவறான வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும் சட்டம் பிறப்பித்துள்ளது.

அதாவது ஆதாரம் இன்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top