திரையரங்குகளில் வெளியாகிறதா ‘ஜெய்பீம்’: முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் அமேசானில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் வன்னியர் அமைப்புகள் பாமகவினர் இந்த படத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் மகாதேவா என்பவர் ஜெய்பீம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் அனைவரும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பொதுவாக ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பான படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பே இல்லை. அதற்கு அனுமதி வழங்கப்படாது. ஆனால் தமிழக முதல்வர் தலையீட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் அமேசான் நிறுவனத்திடம் தமிழக முதல்வர் பேசி இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் முன்னாள் கர்நாடக அமைச்சர் மகாதேவா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழக முதல்வரின் முயற்சியால் ‘ஜெய்பீம்’படம் திரையரங்குக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment