ஜெய்பீம் திரைப்படம்: நடிகர் சூர்யாவிற்கு யார் யார் ஆதரவு? எதிர்ப்பு?

நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாகி தமிழகமெங்கும் மிகுந்த பரபரப்பு உருவாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். சந்துரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவரையும் வியக்கவைத்தது.

ஜெய் பீம்

இருப்பினும் ஜெய்பீம் படத்திற்கு வன்னியர் சமூகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சந்தானம்

நடிகர் சந்தானம்:

ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையல்ல என்று ஜெய்பீம் படத்திற்கு எதிரான கருத்தினை கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

bharathiraja statement2

இயக்குனர் பாரதிராஜா:

ஒவ்வொரு அரசியல்வாதி வாசலிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று இயக்குனர் பாரதிராஜா ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக கூறியுள்ளார்.

அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை:

ஜெய்பீம் படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்; இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் உருவாக்கியிருக்கலாம் என்று ஆதரவாகவும் எதிராகவும் கூறியுள்ளார்.

ஜெய் பீம்

நடிகர் சூர்யா:

எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ சமுதாயத்தை அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் எனக்கும் எனது படக்குழுவினருக்கு இல்லவே இல்லை என்று கூறியுள்ளார். ஜெய்பீம்  படத்துக்கு நீங்கள் தரும் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது.

எனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். ஜெய்ஹிந்த் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு 15 லட்ச ரூபாய் வங்கி வைப்பு நிதி வழங்கினார் நடிகர் சூர்யா.

sathyaraj 1 1

நடிகர் சத்யராஜ்:

சமூகநீதி பற்றி பேசும் நடிகர் ஒருவருக்கு கலைத்துறை சேர்ந்த கலைஞர்கள் துணை நிற்க வேண்டும் என்று சத்யராஜ் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யா அவருக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment