வன்னியர் சங்கம் கண்டனம் எதிரொலி: ‘ஜெய்பீம்’ முக்கிய காட்சி மாற்றம்!

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததையடுத்து அந்த படத்தில் உள்ள முக்கிய காட்சி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எஅ காட்டப்பட்டு இருக்கிறது என்றும் இருளர் இனத்திற்கு கிடைக்கவேண்டிய நீதியை காட்டுவதை விட வில்லன் கேரக்டரை வன்னியர் என காட்டுவதிலேயே ஜெய்பீம் படக்குழு தீவிர முயற்சி செய்து உள்ளதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இயக்குனர் கவுதமன் உள்பட பலரும் படக்குழுவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ படக்குழு தற்போது ஒரு சில காட்சிகளை மாற்றி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் கேரக்டர் போனில் பேசும்போது பின்னணியில் அக்னி கலசம் கொண்ட காலண்டர் இருக்கும். இந்த காலண்டர்தான் வன்னியர் அடையாளத்தை காட்டுதாக கூறப்பட்டு வந்ததால் தற்போது அந்த காலண்டரில் லட்சுமி படம் இருப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு கண்டனம் தெரிவித்து வருபவர்கள் அமைதியாவார்களா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment