Connect with us

ஜெய்பீம் பட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

jai bhim nove2

பொழுதுபோக்கு

ஜெய்பீம் பட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் படம் திரைக்கு வந்த முதல் நாளில் இருந்தே குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி இருப்பதாக குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் சந்தோஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வேளச்சேரி காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு எதிரான நடவடிக்கையை தடைசெய்ய வேண்டும் என நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் தரப்பில் தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குரிய நாள்காட்டி நீக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று அமலுக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு குறித்து புகார்தாரர், காவல்துறையினர் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 21 தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top