ஜெய் பீம் படம் காலண்டர் கவனத்தில் பதியவில்லை; புண்பட்டோருக்கு வருந்துகிறேன்!: இயக்குனர் குமுறல்!

அமேசன் பிரைம் இல் நவம்பர் 1ஆம் தேதி வெளியான ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனால் சூர்யாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் வன்னிய சமுதாயத்தின் மக்கள் சூர்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஜெய் பீம்

அதோடு சூர்யா ஹட்ஸ் வன்னியர் இன்று இணையத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது அதன் பின்னர் சூர்யாவுக்கு எதிராக பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் ஜெய் பீம் காலண்டர் கவனத்தில் பதியவில்லை புண் பட்டோருக்கு வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி தமிழ்நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஜெய்பீம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி என்று இயக்குனர் கூறியுள்ளார்.

jaibhim change

இது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்காக போராட்டத்தை நடத்தியது குறித்தும், நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது நடத்திய வழக்கில் காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால் எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வைத்து இந்த வகையில்தான் படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு நீண்ட காலமாக பழங்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார்.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தில் காணப்படும் ஒரு காலண்டர் படம் சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை என்றும் கூறியுள்ளார். 1955-ஆம் ஆண்டு காலத்தை அந்த காலண்டர் நோக்கமே அன்றி குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் இல்லை என்று இயக்குனர் கூறியுள்ளார்.

நாங்கள் ஒன்றாம் தேதி படம் வெளிவந்த பின்னர் காலண்டர்  படம் பற்றி சமூக வலைதளம் மூலம் அறிந்தவுடன் உடனடியாக இரண்டாம் தேதி காலை அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment