விரைவில் ஜெய் பீம்-2! இயக்குனர் மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடித்த கடந்த ஆண்டு வெளிவந்த ஜெய்பீம் படமான தென்னிந்தியாவையே திரும்பிபார்க்க வைத்தது.

அதன் படி, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மணிகண்டன், ரஷிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோரின் நடிப்பானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே சமயம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் 2-வின் எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற 53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் ஜெய் பீம் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் நீதிபதி சந்துரு இதுபோன்று பல வழக்கைக் கையாண்டு இருப்பதால் விரைவில் ஜெய் பீம் 2 கட்டாயம் வரும் என தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.