தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இதனையடுத்து இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே
பொதுவாக ஓடிடியில் ஒரு திரைப்படம் ரிலீஸ் என்றால் ரிலீஸ் தேதிக்கு முந்தைய நாள் இரவே ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் இன்று இரவே பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர்
ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ஜகமே தந்திரம் திரைப்படம் நாளை மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் நாளை இந்த படத்தை அவர்கள் பார்த்து தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது