Connect with us

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் தேர்வு!!

jegadeep thangar

செய்திகள்

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் தேர்வு!!

அடுத்த மாதம் இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பலரும் வேட்பாளர்களை அறிவித்தனர். அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியான பாஜக இந்த முறை குடியரசு தலைவர் வேட்பாளராக திரவுபதி  முர்மு என்பவரை நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று பாஜக கட்சித் தலைவர் ஜே பி நட்டா கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்பட்டது. மேற்குவங்க மாநில ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1951 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்தவர் ஜெகதீஷ் தங்கர். 71 வயதான ஜெகதீசங்கர் எம்எல்ஏ, எம்பி, மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top