Connect with us

பாஜக கூட்டணியின் துணைத் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர்!!!

jegadeep thangar

செய்திகள்

பாஜக கூட்டணியின் துணைத் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர்!!!

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைப்பெற உள்ளது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் யாரை நியமிப்பது என்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைப்பெற்றது. இந்நிலையில் பாஜக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர் தற்போது மேற்குவங்க ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top