ஜடேஜாவின் கூலான பதில்! ஆடிப்போன பிரஸ்; அப்படி என்ன கேள்வி கேட்டாங்க?

ஜடேஜா

நேற்றைய தினம் இந்திய அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பலப்பரிட்சை கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது 86 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்று களமிறங்கியது.

ஜடேஜா

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பேட்மேன் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா அதிரடி காட்டினர். இதனால் இந்த சிறிய விளக்கை 6.3 வது ஓவரில் தாண்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனால் புள்ளி பட்டியலில் இந்திய அணி சரசரவென உயர்ந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா விடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதில் அவர் மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார்.

 

நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான்

அதன்படி நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் இடையே போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றால் இந்திய அணி என்ன செய்யும்? என்று கேட்டதற்கு, இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணி வீரர்கள் துணிகளை பேக் செய்து வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான் என்று மிகவும் கூலாக பதில் சொன்னார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print