அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட நான்கு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கும், எம்எஸ் தோனி 12 கோடிக்கும், மொயின் அலியை 8 கோடிக்கும், ருத்ராட்சை 6 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை 16 கோடிக்கும், ஜஸ்பிரித் பும்ரா 12 கோடிக்கும் சூர்யகுமார் யாதவ் 8 கோடிக்கும், பொல்லார்டை ஆறு கோடிக்கும் தக்கவைத்துள்ளது.
ராயல் சேலஞ்ச் பெங்களூர்:
ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் விராட் கோலியை 15 கோடி ரூபாய்க்கும், கிளன் மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும், முகமது சிராஜ் 7 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்:
ரிஷப் பண்ட் 16 கோடி ரூபாய்க்கும் ,அக்சர் பட்டலை 9 கோடி ரூபாய்க்கும், பிரித்வி சாவை 7.5 கோடி ரூபாய்க்கும், நோக்கியாவை 6.50 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ரசூலை 12 கோடி ரூபாய்க்கும், சக்கரவர்த்தியை 8 கோடி ரூபாய்க்கும், வெங்கடேஷ் அய்யரை 8 கோடி ரூபாய்க்கும்,சுனில் நரேனை 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்:
மயங்க் அகர்வாலை 2 கோடி ரூபாய்க்கும், அர்ஜித் சிங் 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கேன் வில்லியம்சன் 14 கோடி ரூபாய்க்கும், அப்துல் சமத் 4 கோடி ரூபாய்க்கு, உம்ரான் மாலிக்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சனை 14 கோடி ரூபாய்க்கும், ஜாஸ் பட்டலரை 10 கோடி ரூபாய்க்கும், ஜாய்ஸ்வாலை 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது.