Connect with us

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்…. இப்படி ஒரு வாய்ப்பா? பொறாமையில் பொசுங்கும் சக நடிகைகள்….!

shivani 1

பொழுதுபோக்கு

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்…. இப்படி ஒரு வாய்ப்பா? பொறாமையில் பொசுங்கும் சக நடிகைகள்….!

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்…. இப்படி ஒரு வாய்ப்பா? பொறாமையில் பொசுங்கும் சக நடிகைகள்….!

சீரியல்கள் மற்றும் இன்ஸ்டாகிரம் ரீல்ஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார். தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சக நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.

இளம் வயதான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என டாப் நடிகர்களுடன் அமைந்ததால் ஷிவானி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தார்.

இதனை தொடர்ந்து இரண்டாவதாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படத்திலும், 8 தோட்டாக்கள் பட ஹீரோ வெற்றி நடிக்கும் பம்பர் என்ற படத்திலும் நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி வந்தார்.

இப்படி அடுக்கடுக்காக படங்களில் ஒப்பந்தமாகி வந்த நிலையில் தற்போது ஜாக்பாட் போல காமெடி கிங் வடிவேலு படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்துள்ளதாம். ஆம் அதன்படி நடிகர் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகியுள்ளாராம்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் நடிகை ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சிவாங்கி ஆகியோரும் முக்கிய நகைச்சுவை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top