Connect with us

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்;;; இனி கல்லூரிகளில் இலவச இடம்!!

transgender india

தமிழகம்

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்;;; இனி கல்லூரிகளில் இலவச இடம்!!

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்;;; இனி கல்லூரிகளில் இலவச இடம்!!

தமிழகத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதேபோல் திருநங்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருநங்கைகளும் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நகர்புற பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் முறையை அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி கல்லூரியில் இனி திருநங்கைகளுக்கு இலவச இடம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இளங்கலை, முதுகலை படிப்பில் சேர விரும்பும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 131 கல்லூரிகளில் மூன்றாம் பாலின தலா ஒரு இடம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்தவுடன் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் உயர் கல்வி பயில்வது ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் சென்னை பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top