Connect with us

பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கு ஜாக்பாட்..! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலக்கல் அறிவிப்பு..

FOG1MNQakAIaBUg

செய்திகள்

பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கு ஜாக்பாட்..! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலக்கல் அறிவிப்பு..

பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கு ஜாக்பாட்..! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலக்கல் அறிவிப்பு..

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டம் மார்ச் 18- ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் விவாதம் மார்ச் 21,22,23 ஆகிய தேதிகளில்  நடந்து முடிந்தது. இதனிடையே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைகள் மற்றும் குறைகள் பற்றி எதிர்கட்சி தரப்பில் கேள்விகள் எழுந்தன.

அந்த வகையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் உரை அளித்திருக்கிறார்.

இதில் சென்னையில் அரசு விடுதிகள் கட்டப்படும் என்றும் அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரைமட்டுமே படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும்,  கடந்த அதிமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரித்து இருப்பதாகவும் தற்போதைய பட்ஜெட் மீது  தவறான கருத்துக்களை எதிர்கட்சிகள்  பதிவிட வேண்டாம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top