Connect with us

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்..!!!

flag india sri lanka 260nw 1626250228 1

செய்திகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்..!!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்..!!!

தற்போது இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை அரசுக்கு இந்திய அரசு அடுத்தடுத்து அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்களை உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடும் பொருளாதார நெருக்கடியில் தற்போது இந்தியாவுக்கு பெரிய ஜாக்பாட் அடித்தது போல நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

அதன்படி இந்திய துணி வகை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜவுளி இறக்குமதி செய்து வந்த சில நாடுகளின் பார்வை தற்போது நம் இந்தியா மீது திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இலங்கையில் இருந்து ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபடும் நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில ஆர்டர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜவுளித்துறை ஏற்றுமதி சுமார் 43 பில்லியன் டாலராக இருந்தது என்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார். இந்த ஆண்டு 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top