பொறியியல் மாணவர்களுக்கு ஜாக்பாட்..! இந்த படிப்புகளுக்கு வேதியியல், கணிதம் அவசியம் இல்லை..

குறிப்பிட்ட பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், வேதியல் பாடங்கள் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது. அதில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்பில் சேர்வதற்கு கணிதம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரமுடியும். கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு இரண்டு செமஸ்டர்களில் கணிதம், இயற்பில் மற்றும் வேதியில் பாடங்களின் அடிப்படை கல்வி bridge course முறையில் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கட்டிடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு, தோல் பதனிடுதல் போன்ற படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை விருப்ப பாடமாக படித்திருந்தால் மட்டுமே அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment