Connect with us

பாலிவுட் நடிகருக்கு ஜாக்கிசான் கொடுத்த பரிசு

Entertainment

பாலிவுட் நடிகருக்கு ஜாக்கிசான் கொடுத்த பரிசு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் நடித்த ‘குங்பூ யோகா’ என்ற திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சோனுசூத் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்

இந்த நிலையில் நடிகர் சோனுவுக்கு ஜாக்கிசான் ஒரு சிறப்பு பரிசை அனுப்பி வைத்துள்ளார். தனது ஜேசி ஸ்டண்ட் டீம் சார்பில் இந்த பரிசை வழங்கியிருப்பதாகவும், குளிர்காலத்தில் போடப்படும் இந்த ஸ்வட்டர் பரிசு உங்கள் கண்முன் தோன்றும் போதெல்லாம் என் ஞாபகம் வரும் என்றும் இதனை அணியும்போது என்னை ஆரத்தழுவியது போன்ற உணர்வை பெறுவீர்கள் என்றும் ஜாக்கிசான் கடிதம் ஒன்றையும் சோனுவுக்கு எழுதியுள்ளார்.

மிகச்சிறந்த லெதர் கொண்டு மிகச்சிறந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த சர்ட்ஜாக்கெட், மிகவும் கவனத்துடன் கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பொக்கிஷமாக வைத்து பாதுகாப்பேன் என்றும் சோனு கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top