ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் வீட்டுலையா! எப்படி செய்யனு தெரியுமா?

முருங்கைக்காய் – 3 துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்
துவரம் பருப்பு – 1/3 கப்
புளி – 1 சிறிய நெல்லிக்காய் அளவு கரைத்து கொள்ளவும்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மல்லித்தழை – சிறிது

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை 1 கப் சுடுநீரில் ஊற வைத்து, கட்டியாக சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள்,சீரகம் சிறிது சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் முருங்கைக்காயைப் போட்டு, 1 நிமிடம் வதக்கி, பின் அதில் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சுள் தூள் சிறிது சேர்த்து 1 நிமிடம் கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

முருங்கைக்காயானது முக்கால் பதம் வெந்ததும், அதில் 1 கப் புளிச்சாறு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். அதற்குள் முருங்கைக்காயும் நன்கு வெந்துவிடும். இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி.. மல்லித்தழை போட்டி அனைவருக்கும் பரிமாறவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment