இது கோடை காலம் தானா? பார்த்தா அப்படி ஒன்னும் தெரியல.!! இன்னும் 3 நாளைக்கு கனமழை..!!

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. ஆனால் கோடை காலம் தான் நிலவுகிறதா என்று பலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் கன மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதன்படி தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பெய்கின்ற கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் 17-ஆம் தேதி வரை கன மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 12 சென்டி மீட்டர் மழை பதிவானது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment