படங்கள் குறித்தும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் அவ்வபோது வதந்திகள் பரவி வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில சமயங்களில் அந்த வதந்தியே ஏதேனும் ஒரு பெரிய பிரச்சனைக்கு ஆரம்பமாகி விடும் சூழலும் உருவாகியுள்ளது.
தற்போது அப்படி ஒரு சம்பவத்தை தான் தனுஷ் படக்குழுவினர் சந்தித்துள்ளனர். தமிழில் உச்ச நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். அந்த வரிசையில் தனுஷ் முதல் முறையாக நடிக்கும் நேரடி தெலுங்கு படமும் உள்ளது.
அதன்படி பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் தான் வாத்தி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா மேனன் விலகிவிட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனை அறிந்த படக்குழுவினர், மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வாத்தி படக்குழுவினர், “இந்த செய்தி வெறும் வதந்தி தான். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. மேலும், எங்கள் படத்தை பற்றி இதுபோன்ற வதந்திகளை இனிமேல் பரப்பாதீர்கள்” கூறியுள்ளனர்.